

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா தொற்றால் சிங்கம் உயிரிழந்த நிலையில், முதுமலை யானைகள் காப்பகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள யானைகளுக்கு சமூக இடைவெளியை பின்பற்றி, உணவுகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு யானைகளையும் தனித் தனியாக வரவழைத்து உணவு வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பாகன்கள் மூலம் யானைகளுக்கு தொற்று பரவாமல் இருக்க, ஒவ்வொருவரும் சமூக இடைவெளி விட நடக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிருமிநாசினி தெளிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளும், மேற்கொள்ளப்பட்டு வருகிறது.