

பணி நிரந்தரம், குறைந்தபட்சம் சம்பளம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோவை மண்டல தலைமை பணிமனை முன் நடந்த இந்த போராட்டத்தில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள், முழக்கங்கள் எழுப்பினர். தடையை மீறி, போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை கைது செய்தனர்.