ஹெட்போன், Earbuds யூஸ் செய்வோர் உஷார் ``இதற்கு மேல் பயன்படுத்தாதீர்கள்’’ சுகாதார துறை எச்சரிக்கை
ஹெட்போன், இயர் போன்கள் பயன்படுத்துவதால், செவித்திறன் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதாரத்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி Bluetooth earphone, Headphone, Earbuds போன்றவற்றின் தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவை ஏற்படின் 50 டெசிபல் ஒலிக்கு மேலே இல்லாமல் பயன்படுத்த வேண்டும் என்றும், தினமும் 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, குழந்தைகள் அதிகமாக கைப்பேசி, தொலைக்காட்சி பார்ப்பதை குறைக்க வேண்டும். ஏனெனில் இது மூளை வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
Next Story
