

கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்திற்காக, லஞ்சம் கேட்டதன் எதிரொலியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் மைதிலி என்பவர் 42 பேரிடம் தலா ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை, லஞ்சம் வாங்கி இருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.