புழல் சிறையில் கேட்பாரற்று கிடந்த பொட்டலம் | பார்த்து அதிர்ந்து போன போலீசார்
சென்னை அடுத்த திருவள்ளூரில் உள்ள புழல் சிறையில், சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அவ்வப்போது காவலர்கள் நடத்தும் சோதனையில், செல்போன், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விசாரணை சிறையில் கண்காணிப்பு கோபுரம் அருகே நடைபெற்ற தூய்மை பணியின் போது புதரில் கேட்பாரற்று கிடந்த பொட்டலத்தை பிரித்த போது அதில் 1 செல்போன், 39 கிராம் கஞ்சா, சிகரெட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story