அதிகமான வீட்டுப்பாடம் தந்ததால் 10ஆம் வகுப்பு மாணவி விபரீத முடிவு
சென்னை பெரம்பூரில், பள்ளியில் அதிகளவு வீட்டுப்பாடம் கொடுத்ததாக கூறி மன உளைச்சலுக்கு உள்ளான 10ஆம் வகுப்பு மாணவி, மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன் என்பவரின் மகள், தனியார் பள்ளியில் பயின்று வருகிறார். பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்ததும், தைராய்டு மாத்திரைகளை அதிகமாக எடுத்து உட்கொண்ட மாணவி, 2வது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில், மாணவியின் 2 கால்களும் முறிந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story