தந்தை திட்டியதால் 10ம் வகுப்பு மாணவி தற்கொலை

x

சென்னை ராமாபுரத்தில் வீட்டு வேலை செய்யவில்லை என தந்தை திட்டியதால் பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமாபுரம் காந்திநகர் நான்காவது தெரு பகுதியை சேர்ந்த தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பாஸ்கர், விடுமுறையில் தனது வீட்டில் இருந்த மகள் சுபஸ்ரீயை வீட்டில் வேலை எதுவும் செய்யவில்லை என கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் தாய் குளிக்க சென்ற நேரத்தில் மின்விசிறியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்