இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் இந்தியர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து நாளை துபாயில் இருந்து 2 விமானங்களில் 400க்கும் மேற்பட்டவர்களை அழைத்து கொண்டு முதல் விமானம் சென்னை வர உள்ளது. இதனால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.