நாக்கை துருத்தி பெண்களை தாக்கிய டிஎஸ்பி..மதுரையில் பரபரப்பு-அதிர்ச்சி காட்சி

x

மறியலில் ஈடுபட்ட பெண்கள் மீது டிஎஸ்பி சந்திரசேகரன் தாக்குதல்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

உ.மாரிபட்டி கிராமத்தில் காவல்துறையில் பணியாற்றும் குடும்பத்தினர், கோவிலுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்கள் உசிலம்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயன்றார். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், டிஎஸ்பி சந்திரசேகரன் மற்றும் போலீசார், பெண்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்