குடிவெறி முற்றி இளைஞர் செய்த காரியம் - துடிதுடித்து மூதாட்டி மரணம்

x

மூதாட்டி மர்ம மரணத்தில் திருப்பம் - நகைக்காக கொலை செய்தது அம்பலம்

கடலூர் மாவட்டம் நத்தமேடு மூதாட்டி மர்ம மரண வழக்கில், குடிக்க பணம் இல்லாததால், நகையை கொள்ளையடிக்க கொலை செய்தது தெரிய வந்துள்ளது. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி சந்திரா உயிரிழப்பு தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மூதாட்டி அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்ததால் விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி என்ற இளைஞரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், குடிக்க பணம் இல்லாததால் தலையணையால் அமுக்கி மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடியது தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்