நள்ளிரவில் டீ குடிக்க சென்றவர்களை கட்டையால் கொடூரமாக தாக்கிய போதை ஆசாமிகள்

x

உளுந்தூர்பேட்டை ஜூப்ளி தெரு பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார் 18 வயது மற்றும் அவரது நண்பரும் உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையை ஒட்டி அஜீஸ் நகர் பகுதியில் உள்ள டீக்கடைக்கு நேற்று இரவு டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது அஜீஸ் நகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் குடிபோதையில் உங்க ஊர்ல டீக்கடை இல்லையாடா?

இங்கு எதுக்கு வரீங்க என்று கேட்டு நவீன் குமார் மற்றும் அவரிடம் வந்த நபருடன் சண்டை போட்டு உள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த போதை இளைஞர்கள் ஒன்று கூடி கட்டை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் நவீன் குமார் உள்ளிட்ட இருவரையும் பயங்கரமாக தாக்கியுள்ளனர் இதில் நவீன் குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அவர் அங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்கும் காட்சிகளும் அவரை விடாமல் துரத்தி சென்று போதை இளைஞர்கள் கொடூரமாக தாக்கும் காட்சிகளும் தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே இந்த காட்சிகளின் அடிப்படையில் தற்போது உளுந்தூர்பேட்டை போலீசார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்