குடித்துவிட்டு கார் மீது மோதிய பள்ளி வேன் ஓட்டுநர்.. சரமாரியாக வெளுத்தெடுத்த மக்கள்

x

காட்டுமன்னார்கோவில் அருகே கும்பகோணம் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளில் சென்ற சிறுவனின் மீது கார் மோதிய விபத்தில், 12 வயது பள்ளி மாணவரான மகேஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பள்ளி விடுமுறை என்பதால், நண்பர்களுடன், ஒன்றாக இவரும் சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, வானமாதேவி என்ற கிராமத்தில், சிறுவர்களின் பின்னால் வந்த ஒரு காரானது, சிறுவனின் சைக்கிளில் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதை நேரில் கண்ட அவரது சக நண்பர்கள் கதறி அழுது துடித்தனர். இந்த சூழலில், அந்த வழியாக வந்திருந்த, விசிக MLA சிந்தனை செல்வன், சம்பவ இடத்தில் நடந்தவற்றை கேட்டறிந்தார். அப்போது, நண்பனை இழந்த துக்கத்தோடு, அவரது உயிரிழப்புக்கு தாங்களும் காரணமா? என பயத்தில் அழுத சிறுவர்களை அவர் ஆறுதல் கூறி தேற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்