ஃபுல் போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய மருத்துவர்.. பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்..

ஃபுல் போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய மருத்துவர்.. பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்..
Published on

சென்னை போரூரில், மதுபோதையில் மருத்துவர் அதிவேகமாக கார் ஓட்டியதில், கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில், பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். போரூரில், 11 ம வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவன், அய்யப்பந்தாங்கல் பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, இந்த கோர சம்பவம் அரங்கேறியது. படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மணப்பாக்கத்தை சேர்ந்த மருத்துவர் சதீஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com