மதுபோதையில் கார் ஓட்டி விபத்து...காவலர்கள் இருவர் காயம்

x

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, மதுபோதையில் கார் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். காவலர்கள் இருவர் காயமடைந்தார்.

சென்னையில் போக்குவரத்துக் காவலராக பணிபுரிந்து வரும் சுகுமார், அவரது அண்ணன் திலீப் மற்றும் ஆயுதப்படை பட்டாலியன் பிரிவில் பணியாற்றி வரும் நெப்போலியன் ஆகிய மூவரும், சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி காரில் சென்றனர்.

விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில், சிதம்பரம் அருகே அழிஞ்சமேடு பகுதியில், முன்னால் சென்ற கனரக லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சுகுமார் மற்றும் நெப்போலியன் காயமடைந்த நிலையில்,

திலீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவலர்கள் இருவரையும், மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்