Chidambaram | மதுபோதையில் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ டிரைவர்

மதுபோதையில் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஆட்டோ டிரைவர்

#chidambaram #thanthitv

சிதம்பரம் அருகே முட்லூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது பின்னால் வந்த ஆட்டோ ஒன்று பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுநர் மதுபோதையில் ஆட்டோவை அதிவேகமாக ஓட்டிய நிலையில், சில இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் திரைப்படப் பாணியில் பின்தொடர்ந்து வீடியோ எடுத்தவாறு விரட்டினர். மணலூர் வரை சென்று மீண்டும் சிதம்பரம் நோக்கி வேகமாகத் தப்பியோடிய அந்த ஆட்டோ ஓட்டுநர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, படுகாயமடைந்த இருவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அண்ணாமலை நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com