Drugs | TN Police | கோடி கணக்கில் மதிப்பு.. கிட்டத்தட்ட 1 டன் கஞ்சா.. மொத்தமாக அழித்த TN போலீஸ்
செங்கல்பட்டு அருகே 2 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட உயர்ரக போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டன. திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் 133 குற்ற வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து 750 கிலோ கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த போதை பொருட்கள், செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவக் கழிவுகள் எரியூட்டும் நிறுவனத்தில் வைத்து எரித்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு 2 கோடி ரூபாய் இருக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
