கோயிலில் அட்ராசிட்டி செய்த போதை ஆசாமி - வைரலாகும் வீடியோ
பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவ விழாவில் மது போதையில் அடாவடி செய்த போதை ஆசாமியால் சலசலப்பு ஏற்பட்டது. சிவகாசி, திருத்தங்கல் பகுதிக்குட்பட்ட நாராயணப் பெருமாள் கோவிலின் ஆனி மாத பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரமோற்சவ விழாவில் அத்துமீறி நுழைந்த போதை ஆசாமி கோவிலின் உள்ளே அடாவடி செய்தார். கோவில் நிர்வாகிகள் போதை ஆசாமி குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் போதை ஆசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story