நூதன முறையில் போதை..பசை டப்பாவை கேட்ட சிறுவர்கள்.. தராத ஆத்திரத்தில் வெறிச்செயல்

x

நூதன முறையில் போதை..பசை டப்பாவை கேட்ட சிறுவர்கள்.. தராத ஆத்திரத்தில் வெறிச்செயல்

மதுரையில் போதைக்காக மரப்பலகை ஒட்டும் பசை டப்பாவை கேட்டு தராத ஆத்திரத்தில் கதவு தயாரிப்பு நிறுவனத்தின் மீது 3 சிறுவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வாகைக்குளம் பகுதியில் மரக்கதவுகள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கிவருகிறது. இந்நிறுவனத்தின் மீது ஞாயிற்றுகிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் வாகனம் ஒன்று சேதமடைந்தது. இது குறித்து உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் காலி பசை டப்பாவை நூதனமுறையில் போதைக்காக பயன்படுத்த ஊழியர்களிடம் கேட்ட போது தரமறுத்ததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்