கடும் வறட்சி : சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்...

ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கடும் வறட்சி : சுமார் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் கருகும் அபாயம்...
Published on
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் நீர் இல்லாததால் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பேச்சிப்பாறை பெருஞ்சாணி அணைகளின் நீரை நம்பி குமரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் விவசாயப் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், கடும் வறட்சி மற்றும் ஏரி, குளங்கள் தூர் வாரப்படாததால் செண்பகராமன்புதூர், இறச்சகுளம், பறக்கை உள்ளிட்ட பல இடங்களில் நடவு செய்யப்பட்டுள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளை முறையாக பராமரித்து பாதுகாத்தால் எந்த விதமான வறட்சியையும் தாங்கும் என்றும், இதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com