வாகன ஓட்டுநர் உரிமம், ஆவணங்கள் டிசம்பர் 31 வரை செல்லும் - மத்திய அரசு

காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

காலாவதியான வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லத்தக்க காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில்கொண்டு, வரும் டிசம்பர் 31 வரை நீட்டித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் மற்றும் அடுத்த மாதம் செப்டம்பர் வரையில் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது டிசம்பர் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com