போலீசார் கைது செய்ய சென்றபோது 3வது மாடியில் இருந்து விழுந்து ஓட்டுநர் மரணம் - சென்னையில் அதிர்ச்சி

போலீசார் கைது செய்ய சென்றபோது 3வது மாடியில் இருந்து விழுந்து ஓட்டுநர் மரணம் - சென்னையில் அதிர்ச்சி

போலீசார் கைது செய்ய சென்றபோது 3வது மாடியில் இருந்து விழுந்து ஓட்டுநர் மரணம் - சென்னையில் அதிர்ச்சி

#death #chennai #police #arrest #thanthitv

சென்னை புழல் அருகே, காவல்துறையினர் கைது செய்ய முயன்றபோது மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த வணிகவரித்துறை அலுவலக ஓட்டுநர் உயிரிழந்த நிலையில், காவல்துறையினர் தனது கணவரைக் கொன்றுவிட்டதாக மனைவி குற்றம்சாட்டியுள்ளார். கதிர்வேடு பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டியன், செங்கல்பட்டு வணிகவரித்துறை அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவரை விசாரிக்க காவல்துறையினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த ராஜபாண்டியன், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்தும் காவல்துறையினர் அத்துமீறியதாக அவரது மனைவி குற்றம்சாட்டியுள்ளார். சம்பவம் குறித்து புழல் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com