பொதுமக்களை தரக்குறைவாக பேசிய ஓட்டுநர், நடத்துநர்.. கொந்தளித்த மக்கள்-அடுத்தநாளே அதிரடி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதை தட்டிக்கேட்ட பொதுமக்களை தரக்குறைவாக பேசிய விவகாரத்தில், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களை ஓட்டுநரும் நடத்துனரும் தரக்குறைவாக பேசிய வீடியோ நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக, காரைக்குடி போக்குவரத்துக்கழக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், ஓட்டுநர் செல்லையா மற்றும் நடத்துனர் ஆண்டிச்சாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
Next Story
