வரதராஜபுரம் ஊராட்சியில் கழிவுநீருடன் குடிநீர்

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
வரதராஜபுரம் ஊராட்சியில் கழிவுநீருடன் குடிநீர்
Published on

* திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து நசரத்பேட்டை, வரதராஜபுரம் ஊராட்சிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

* அப்போது, வரதராஜபுரம் ஊராட்சியில் கழிவுநீர், குளம் போல் தேங்கி இருப்பதால், குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாகவும், கொசு உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படுவதாகவும் கூறி ஆட்சியரை, அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, வட்டாட்சியர் புனிதவதி மற்றும் அதிகாரிகளை ஆட்சியர் கண்டித்ததுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com