Kovai | திடீரென சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய குடிநீர் - திணறிய வாகன ஓட்டிகள்
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் குறிச்சி - குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பால் ஆறுபோல சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆத்து பொள்ளாச்சி பகுதியில் இருந்து குழாய் மூலம் கிணத்துக்கடவு, குறிச்சி, குனியமுத்தூர் ஆகிய பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் நிலையில், கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் முன்பு குழாயில் விரிசல் தண்ணீர் வீணாகி சாலையில் ஆறுபோல ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்தனர்.
Next Story
