Pipe Water|குடிநீர் குழாயில் உடைப்பு..லட்சக்கணக்கான லிட்டர் நீர் வீடுகள் வழியே புகுந்ததால் அதிர்ச்சி

குடிநீர் குழாயில் உடைப்பு..லட்சக்கணக்கான லிட்டர் நீர் வீடுகள் வழியே புகுந்ததால் அதிர்ச்சி

#pipewater #thiruvaurnews

திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட நெய்விளக்கு தோப்பு பகுதியில், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் சாலையில் வீணாகி வருகிறது. நகராட்சி நிர்வாகத்தினர் சாலை பணியின்போது குழாய் உடைந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று முதல் தண்ணீர் வெளியேறி சாலையில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறைக்கும் மேல் குடிநீர் குழாய் உடைந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தேங்கி நிற்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் உள்ளதால், உடைப்பை உடனடியாக சரிசெய்து தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com