குடிநீர் ஆலை விண்ணப்பங்கள் வரவேற்பு : சென்னை தரமணியில் உள்ள நீர்வள ஆதார துறையை அணுகலாம் - தமிழக அரசு

குடிநீர் சுத்திகரிப்பு ஆலை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புதிய விண்ணப்பங்களை வரவேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குடிநீர் ஆலை விண்ணப்பங்கள் வரவேற்பு : சென்னை தரமணியில் உள்ள நீர்வள ஆதார துறையை அணுகலாம் - தமிழக அரசு
Published on

குடிநீர் சுத்திகரிப்பு ஆலை தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், புதிய விண்ணப்பங்களை வரவேற்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக குடிநீர் சுத்திகரிப்பு ஆலை தொடங்கவும், ஏற்கனவே ஆலையை நடத்துபவர்கள் புதிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, சென்னை தரமணியில் உள்ள மாநில நீர்வள ஆதாரத் துறையின் தலைமை பொறியாளரை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தொலைபேசி எண்கள் மற்றும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள முகவரியையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com