Govt Doctor| `டெல்லி’ காருக்கு ஆசைப்பட்டு இருந்ததையும் இழந்த தமிழக அரசு டாக்டர்

`டெல்லி’ காருக்கு ஆசைப்பட்டு இருந்ததையும் இழந்த தமிழக அரசு டாக்டர்

டெல்லி கார் ஆசையில் ரூ.15 லட்சத்தை இழந்த அரசு மருத்துவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் முகுந்தனிடம், டெல்லியில் இருந்து முப்பது லட்சம் மதிப்புள்ள காரைக் குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாகக் கூறி பதினைந்து லட்ச ரூபாயை மோசடி செய்த தம்பதியில் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

புருஷோத்தமன் மற்றும் அவரது மனைவி சந்திரலேகா ஆகியோர் குறைந்த விலை ஆசைகாட்டி ஏமாற்றிய நிலையில், பாதிக்கப்பட்ட டாக்டர் அளித்த புகாரின் பேரில் புருஷோத்தமனை கைது செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அவரது மனைவியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

#delhi #car #govtdoctor #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com