அரசு ரத்த வங்கிகள், பரிசோதனை நிலையங்கள் தரமானதாக இல்லை - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்

இந்த சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசு ரத்த வங்கிகள், பரிசோதனை நிலையங்கள் தரமானதாக இல்லை - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்
Published on

கெட்டுப்போன ரத்தம் செலுத்தப்பட்டதால் 15க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் அரசு மருத்துவமனைகளில் பலியாகி உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அரசு ரத்த வங்கிகள் மற்றும் ரத்த பரிசோதனை நிலையங்களின் சேவைகள் தரமானதாக இல்லை என்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், ரத்த வங்கிகள் மற்றும் நிலையங்களின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினார்.

X

Thanthi TV
www.thanthitv.com