வரதட்சணை கொடுமை, மாமனார் பாலியல் துன்புறுத்தல் - இளம்பெண் தற்கொலை

x

ராமநாதபுரத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் மாமனாரின் பாலியல் துன்புறுத்தலால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாமனாரை கைது செய்யும் வரை உடலை வாங்க மட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் பெருநாழி வீரமாய்ச்சன்பட்டியை சேர்ந்த முனீஸ்வரனுக்கு, அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா என்பவருடன் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணமான நாள் முதல் வரதட்சணை கொடுமை என கூறப்படுகிறது. மதுவுக்கு அடிமையான கணவனும், மாமனாரான அண்ணாதுரையும் கொடுமைபடுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மாமனரான அண்ணாதுரை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து கணவரிடம் கூறியபோது "யார் கிட்டையும் சொல்லாத அசிங்கமா போயிரும்னு" சொல்லி சமாதானப்படுத்தியதாவும், மாமியாரிடம் கூறிய போது, "இதை எல்லாம் அனுசரிச்சு தான் போகணும்" கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கொடுமை தாங்காமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்