"வரதட்சணை கொடுமை.. தலாக் தராமல் வேறொரு பெண்ணுடன் கணவர்.."

x

"வரதட்சணை கொடுமை.. தலாக் தராமல் வேறொரு பெண்ணுடன் கணவர்.."

தேனியில், தன்னை ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன்னையும் இதய அறுவை சிகிச்சை செய்த தனது மகனையும் கைவிட்டு விட்டதாக, கணவர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இஸ்லாமியப் பெண் புகார் அளித்த சம்பவம் நடந்துள்ளது. தேனி பெரியகுளத்தைச் சேர்ந்த மெஹ்ராஜ் (Mehraj) என்ற பெண்ணுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சலாம் புகாரி என்பவருக்கும் திருமணம் ஆகி, 21 வயதில் மகன் உள்ளார். இதில், மெஹ்ராஜை அவரது கணவர் வரதட்சணை கொடுமைப்படுத்தியதாக அவர், போலீசில் புகார் அளித்துள்ளார். இதனிடையே, அவர் தன்னோடு பணியாற்றிய மற்றொரு பெண்ணை, திருமணம் செய்து கொண்டு, தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அப்பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இது குறித்து, தேனி மாவட்ட காவல்துறையிலும், விருதுநகர் மாவட்ட காவல்துறையிலும் பலமுறை புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்