தமிழகத்தை உலுக்கிய ஈரோடு இரட்டை கொலை - 4 பேருக்கும் போலீஸ் காவல்

x

ஈரோடு மாவட்டம் சிவகிரி இரட்டை கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கும் 3 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் மற்றும் சென்னிமலையை சேர்ந்த நகை கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய 4 பேர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே விசாரணை அதிகாரி ஏடிஎஸ்பி விவேகானந்தன் 4 பேரையும் போலீஸ் காவலில் விசாரிக்க கொடுமுடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு இருந்தனர். அதன்படி 4 பேருக்கும் வரும் 16 ஆம் தேதி வரை போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்