"ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது" தலைமை ஆசிரியர் பேசும் பகீர் வீடியோ - ராமநாதபுரத்தில் பரபரப்பு

x

ராமநாதபுரம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக பள்ளியில் சேர்க்கப்பட்ட இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவிப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதற்கு மாணவியின் தாய், தமிழக அரசு அப்படி ஒரு விதி எதுவும் போடவில்லை என நிரூபித்தால் அனுமதிப்பீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு மாணவிகள் வருவது தொடர்பாக இஸ்லாமிய தனியார் அமைப்பு சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, முஸ்லிம் மாணவிகள் புர்கா அணிந்து கல்வி பயில தடை ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்