``அவன வெளிய விடாதீங்க..'' - பேசும்போதே உடைந்து அழுத கவினின் தந்தை
Nellai Kavin Father | ``அவன வெளிய விடாதீங்க.. தாதான்னு சொல்லுவான்'' - பேசும்போதே உடைந்து அழுத கவினின் தந்தை
நெல்லையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட ஐ.டி. ஊழியர் கவினின் பெற்றோரிடம் தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தினர் விசாரணை நடத்தினர். கவினின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்திற்கு தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா மற்றும் உறுப்பினர்கள் சென்றனர். தொடர்ந்து கவினின் பெற்றோரிடம் வழக்கு தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கவினின் பெற்றோர் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கவினின் தந்தை சந்திரசேகர்,, சம்பவத்தில் ஈடுபட்ட சுர்ஜித் ஆயுள் முழுவதும் சிறையிலேயே இருக்க வேண்டும் எனக் கூறினார்.
Next Story
