"சிறுவயதில் திருமணம் வேண்டாம்" - இளைஞரின் விபரீத செயல்

x

சிறுவயதில் யாரும் திருமணம் செய்ய வேண்டாம் என இணையத்தில் வீடியோ பதிவிட்டு, செங்கல்பட்டில் இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அருகே அண்ணா நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற

22 வயது இளைஞர் இரண்டு வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

திருமணம் செய்ததிலிருந்தே அவரது குடும்பத்தினரிடையே பிரச்சனைகள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் இறக்கப் போவதாக வீடியோவை பகிர்ந்த ஜெகதீஸ்வரன், ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்