வாட்ஸ்அப்-ல இத பண்ணவே பண்ணிடாதீங்க.. மொத்த அக்கவுண்ட்டும் காலியாகிடும்
Alert || வாட்ஸ்அப்-ல இத பண்ணவே பண்ணிடாதீங்க.. மொத்த அக்கவுண்ட்டும் காலியாகிடும்
வாட்ஸ்அப் மூலம் கல்வி உதவித்தொகை மோசடி - உஷார்!
வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலி மூலம் அரசின் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது, அதற்கு வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டும் என அழைப்பு வந்தால் அதை நம்ப வேண்டாம் என ஈரோடு சைபர் கிரைம் ஏடிஎஸ்பி வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீபத்தில் ஈரோட்டில் ஒரு மாணவி இதுபோன்ற மோசடியால் ஒரு லட்சம் ரூபாய் வரை இழந்ததாக தெரிவித்தார். இது தொடர்பான மோசடியால் பாதிக்கப்பட்டால், உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறியுள்ளார். மேலும், அடையாளம் தெரியாதவர்கள் உங்கள் ஜிபே எண்ணுக்கு பணம் அனுப்பி பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Next Story
