10 ரூபாய் நாணயங்களை பெறக்கூடாது - திரும்ப பெறப்பட்ட போக்குவரத்து பணிமனையின் சுற்றறிக்கை

பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்களை பெறக்கூடாது என ஒட்டப்பட்டிருந்த போக்குவரத்து பணிமனையின் சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது.
10 ரூபாய் நாணயங்களை பெறக்கூடாது - திரும்ப பெறப்பட்ட போக்குவரத்து பணிமனையின் சுற்றறிக்கை
Published on
பயணிகளிடம் 10 ரூபாய் நாணயங்கள் வாங்குவதை நடத்துனர்கள் தவிர்க்க வேண்டும் என திருப்பூர் போக்குவரத்து பணிமனை இரண்டாவது மண்டலத்தில் சுற்றறிக்கை ஒட்டப்பட்டிருந்தது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால், பொதுமக்கள் மத்தியில் 10 ரூபாய் நாணயங்களை பயன்படுத்துவது குறித்து சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுகுறித்து பணிமனை மேலாளர் கூறுகையில், வங்கியில் பணம் செலுத்தும் போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கவே அவ்வாறு சுற்றறிக்கை ஒட்டப்பட்டதாகவும், ஆனால் பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்ததால் அதனை திரும்பப் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com