முகம் முழுக்க ரத்தத்துடன் இறந்து கரை ஒதுங்கிய டால்பின் | Dolphin | Thiruchendur | Thanthi TV
திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டிய பட்டணம் ஜெ.ஜெ.நகர் பகுதி கடற்கரையில், இறந்த நிலையில் ஒரு டால்பின் கரை ஒதுங்கியது. அதைக் கைப்பற்றிய வனத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இப்பகுதியில், டால்பின்களே இல்லை எனக் கூறப்படும் நிலையில், முகத்தில் காயத்துடன் கரை ஒதுங்கிய இந்த டால்பின் பிற மீன்களுடன் சண்டையிட்டோ அல்லது பாறை மீது வேகமாக மோதியோ இறந்து இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
