வலையில் சிக்கிய அரியவகை டால்பினை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு, பாராட்டு குவிந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்த போது, வலையில் அரிய வகை டால்பின் சிக்கியுள்ளது. உடனே மீனவர்கள், அந்த டால்பினை மீண்டும் கடலுக்குள் விட்டனர். மீனவர்களின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது.