

கோவை பன்னிமடை ஊராட்சிக்குட்பட்ட கணுவாய் பகுதியில் இன்று காலை ஆங்காங்கே 13 நாய்கள் இறந்த கிடந்துள்ளன. இதுகுறித்து உடனடியாக ஊராட்சி நிர்வாகத்திற்கும் விலங்குகள் நல வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் ஆய்வு மேற்கொண்டதில் விஷம் கலந்த கோழி கழிவுகளை தின்றதால் இந்த நாய்கள் இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்வுக்காக நாய்களின் சடலங்கள் எடுத்து செல்லப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.