கிணற்றில் தவறி விழுந்த நாய் - 1 மணி நேரம் போராடி மீட்பு...

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். வெள்ளகோவில் உடையார் தோட்டத்தில் வசித்து வரும் குழந்தைசாமி என்பவரின் வளர்ப்பு நாய், அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது. இதனை அறிந்த குழந்தைசாமி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி நாயை கயிறு கட்டி வெளியே கொண்டு வந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com