ஓபிஎஸ்க்கு NDA கூட்டணியில் முக்கியதுவம் இல்லையா? - டிடிவி தினகரன் உடனடி ரிப்ளை
ஓபிஎஸ்க்கு NDA கூட்டணியில் முக்கியதுவம் இல்லையா? - டிடிவி தினகரன் உடனடி ரிப்ளை
"திமுகவுக்கு எதிரான கட்சிகள் NDA கூட்டணியில் இணைய வேண்டும்"
தமிழ்நாட்டிற்கு எத்தனை முறை அமித்ஷா வந்தாலும் பாஜக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாது என முதல்வர் கூறி வருவது பயத்தின் வெளிப்பாடு என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆலந்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அமமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த திறம்பட செயல்படுவோம் எனத்தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்களிடம் திமுக ஆட்சிக்கு எதிரான நிலைப்பாடு உள்ளதாகவும், பாஜக பெயரைச் சொல்லி தமிழக மக்களை திமுக திசைதிருப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
