போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிய மனு-அவசர வழக்காக விசாரிக்க முடிவு

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிய மனு-அவசர வழக்காக விசாரிக்க முடிவு
Published on

அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது. மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி, வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதார‌ர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com