கருவில் பாலினம் கண்டறிந்து கூறிய மருத்துவர் பணியிடை நீக்கம்
சேலம் அரசு மருத்துவமனையில் கருவில் பாலினம் கண்டறிந்து கூறி கைதான அரசு மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என பாலினம் கண்டறிந்து தெரிவிப்பதாக அரசு மருத்துவர் தியாகராஜன் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பாலினம் கண்டறிந்து கூறி பணம் பெற்று வந்த
மருத்துவர் தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து மருத்துவ கல்வி ஆராய்ச்சி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
