சென்னையில் அரசு மருத்துவர் தற்கொலை : பணிச்சுமை காரணமாக தற்கொலையா? - போலீஸார் தீவிர விசாரணை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் விடுதி கட்டிடத்தில் இருந்து மருத்துவர் ஒருவர் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் தங்கும் விடுதியில் இன்று அதிகாலை முதுநிலை பயிற்சி மருத்துவர் கண்ணன் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார். போலீஸ் விசாரணையில், கண்ணன் உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் என்றும், திருமணத்திற்காக பெற்றோர் பெண் பார்த்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com