ஜெயலலிதாவுக்கு 22 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர் - மருத்துவர் சிவக்குமார்

ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்வதற்கான கட்டாயம் ஏதும் ஏற்படவில்லை என​ ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் மறு விசாரணைக்காக மீண்டும் ஆஜரானார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதேபோல் ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படவில்லை என்று மருத்துவர் சிவக்குமார் தெரிவித்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com