"நான் யார் தெரியுமா?" - டிராபிக் போலீசை மிரட்டிய ஆட்டோ ஓட்டுநர்

x

நான் யார் தெரியுமா என போக்குவரத்து போலீசாரை ஆட்டோவில் வந்த நபர் மிரட்டிய வீடியோ வேகமாக பரவி வருகிறது. குரோம்பேட்டை சிக்னல் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக நின்றிருந்த ஆட்டோவை, ஓரமாக செல்லுமாறு பணியில் இருந்த போக்குவரத்து காவலர் கூறியுள்ளார். அப்போது திடீரென கோபமடைந்த ஆட்டோ ஓட்டுநர், நான் யார் தெரியுமா, HOME SECRETARY-ஓட டிரைவர் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எனினும் போக்குவரத்து காவலர், நிதானமாக செயல்பட்டு தனது கடமையை செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்