தமிழகத்தில் தக தகன்னு மின்னப்போகும் அரசு பேருந்துகளின் கலர்.. என்ன கலர் தெரியுமா..? வெளியான தகவல்

x

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளன. அது குறித்த விவரங்களை வழங்குகிறது இந்த தொகுப்பு

மழைக்காலத்தில், மாநகரப் பேருந்துக்குள்ளே குடைபிடிக்கும் நிலை மாறியதோ இல்லையோ, பல முறை பேருந்துகளின் நிறங்கள் மாற்றப்படுவது தொடர் கதையாக இருக்கிறது.

சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள், தமிழகத்தில் இயங்கி வரும் நிலையில், அவை மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது...

தமிழ்நாட்டில், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் உள்ளுர் பேருந்துகளும், மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கும் நீண்ட தூரத்திற்கும் பேருந்துகள் இயங்க்கப்படுகின்றன.

மொத்தமாக 8 கோட்டங்களில் இருந்து இவை இயக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பேருந்துகள் பச்சை நிறத்தில் மிளிர்ந்தன.

பின்னர் அவை நீலம் மற்றும் சிவப்பு நிறங்களுக்கு மாற்றி அழகுபடுத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், 2022 ஆம் ஆண்டில் பெண்களுக்கான சிறப்பு பேருந்துகள் தனித்து தெரியவேண்டும் என்ற நோக்கத்தில் "பிங்க்" நிறத்தில் மாற்றப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக போக்குவரத்து துறை ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்க முடிவு செய்திருந்தது.

அதற்காக நிதி ஒதுக்கிய நிலையில், பழைய பேருந்துகளும் சரிபார்ப்பு செய்யப்பட திட்டம் தீட்டப்பட்டது. இந்த நிலையில்தான், அரசு பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடித்து, தனியார் பேருந்துகளை போல, கவர்ச்சிகரமாக மாற்ற திட்டமிட்டிருக்கிறது போக்குவரத்து துறை .

அரசு பஸ்களுக்கு அடர்த்தியான மஞ்சள், மெரூன் நிறத்தில் பட்டை மற்றும் எழுத்துகள் என ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. விரைவில் மஞ்சள் நிற அரசு பேருந்துகளை சாலையில் காணலாம், அதே போல வெண்மை நிற பேருந்துகளின் நிறமும் மாற்றம் செய்யப்படலாம் என அரசு போக்குவரத்துத்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மறுபுறம் நிறங்களை மாற்ற செய்யும் செலவை... மோசமான நிலையில் உள்ள பேருந்துகளை சீர் செய்ய பயன்படுத்தலாமே, என்று பொது மக்கள் தங்கள் பங்குக்கு கருத்துகளை பகிர்ந்து உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்