Electricity || உங்கள் வீட்டில் AC இருக்கா? AC பயன்பாட்டில் வரப்போகும் புது கட்டுப்பாடு

x

உங்கள் வீட்டில் AC இருக்கா? AC பயன்பாட்டில் வரப்போகும் புது கட்டுப்பாடு

வெயில் சுட்டெரிக்கர கோடையில மின்சாரப் பயன்பாடு அதிகரிக்கரது வழக்கமான ஒன்னு தான். இதில ஏசிக்காக பயன்படுத்தப்படர மின்சார தேவையும் அதிகரிச்சுட்டே போகுது. இப்ப இந்த மின்சார பயன்பாட்டை குறைக்கர வகையில ஏசியில வெப்பநிலை செட்டிங்கில மாற்றத்த கொண்டுவரனும்னு மத்திய அரசு முடிவு செஞ்சிருக்கு. இது பத்தி விரிவா பார்க்கலாம்...

இப்ப பயன்பாட்ல இருக்கர ஏசிக்கள்ள வெப்பநிலையை குறைஞ்சபட்சம் 16 டிகிரி செல்சியஸ்-ஆவும், அதிகபட்சம் 30 டிகிரி செல்சியஸ்-வரைக்கும் செட் செஞ்சுக்க முடியும். இப்ப பிரச்சினை எங்கன்னா வெயில் அதிகரிக்க... அதிகரிக்க நிறைய பேரு என்ன பன்ராங்கன்னா... 16 டிகிரி செல்சியஸ்- வெப்பநிலையிலேயே ஏசியை இயக்கர போக்கு அதிகரிச்சிட்டு வருது. இதனால மின்சார தேவையும் ஜாஸ்தி ஆகிட்டே போகுது.

இந்த சூழல்ல ACயோட வெப்பநிலை செட்டிங்க்ல ரொம்ப விரைவுல புது விதிகள் கொண்டுவரப்பட இருப்பதா மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்திருக்கிறாரு.

அதாவது AC வெப்பநிலை செட்டிங், குறைஞ்சபட்சம் 20 டிகிரி செல்சியஸ்-ஆவும், அதிகபட்சம் 28 டிகிரி செல்சியஸ்-ஆவும் இருக்கும் அப்படீன்னு அவர் சொல்லிருக்காரு.

இந்த விதிகள்... வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஏன் கார்களுக்கு கூட பொருந்தும்னும் அவர் குறிப்பிட்டுருக்காரு.

நாட்டோட மின்சார தேவையை கட்டுப்படுத்தரதுக்காகவே இந்த நடவடிக்கைய எடுப்பதா அவர் சொல்ராரு.

இந்த கோடைக்காலத்துல நாட்டோட அதிகப்பட்ச மின்சார தேவை ஜூன் 9 ஆம் தேதி கணக்குபடி பார்த்தா 241 ஜிகாவாட்ட எட்டுனதாவும் அவர் தெரிவிச்சாரு.

இப்ப நாட்டுல ஒரு நாளைக்கு AC பயன்பாட்டுக்காக 50 ஜிகாவாட் மின்சாரம் செலவாகுதுன்னு அதிகாரிகள் தரப்புல சொல்லப்படுது. அதாவது நாட்டோட மொத்த மின்சார தேவையில, 20 சதவிகிதம் ஏசி பயன்பாட்டுக்காக மட்டுமே செலவிடப்படரது தெரியவருது.

இப்ப, ஏசி வெப்பநிலைய ஒவ்வொருத்தரும் 1 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் போது, மின்சார பயன்பாடு 6 சதவீதம் குறையும்னு ஆய்வு முடிவுகள் சொல்ரதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டுறாங்க.

peak times,அதாவது மின்சார தேவை அதிகரிக்ககூடிய நேரங்கள்ள, AC வெப்பநிலைய ஒரு டிகிரி அதிகரிச்சா சுமார் 3 ஜிகாவாட் மின்சாரத்த சேமிக்கலாம்னும் அவங்க தெரிவிக்கிறாங்க.

இப்ப ஏசிகள்ள செய்யப்பட இருக்கர இந்த மாற்றங்கள சரியா நடைமுறைபடுத்துனா, 2035 ஆம் ஆண்டு வாக்குல 60 ஜிகாவாட் வரைக்கும் மின்சாரத்த சேமிக்க முடியும்னு ஆய்வுகள் தெரிவிக்கிது. அதே வேளையில மின்சார கட்டமைப்ப மேம்படுத்த 7 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய செலவிட வேண்டிய அவசியத்த தவிர்க்கலாம்னும் தெரிவிக்கப்படுது


Next Story

மேலும் செய்திகள்