Courtallam | Tenkasi | குற்றாலம் போகும் பிளான் இருக்கா? - வார்னிங்

குற்றாலம் போகும் பிளான் இருக்கா? - வார்னிங்

குற்றாலம் போகும் பிளான் இருக்கா? - வார்னிங்

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் நீர்வரத்து திடீரென அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.... மேற்கு தொடர்ச்சி மழைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது இந்நிலையில்,, இன்று மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்போது நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றால மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகளை காவல்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர். மேலும், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com