உங்க Whatsapp-க்கு இந்த மாதிரி மெசேஜ் வருதா? - பார்த்ததும் பயந்தா லாக் ஆகிடுவீங்க

WhatsApp மூலமாக லிங்க் அனுப்பி மோசடி செய்யும் கும்பல் – சென்னை போலீஸ் எச்சரிக்கை

சென்னை காவல்துறையின் லோகோவை பயன்படுத்தி மோசடி செய்யும் கும்பலிடமிருந்து விழிப்புணர்வுடன் இருக்க மாநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.

சென்னையில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதை தடுக்கும் வகையில், காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே காவல்துறை அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், சைபர் கும்பல் காவல்துறையின் லோகோவை பயன்படுத்தி, பொதுமக்களுடைய தொலைபேசி எண்ணிற்கு WhatsApp மூலமாக ஒரு லிங்க் அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர்.

எனவே, பொதுமக்கள் இதுபோன்ற மோசடி சம்பவங்களில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

X